Saturday, December 15, 2012

சில...







ஒரு வார்த்தை
ஒரு பார்வை
வேண்டாம்..
இருக்கிறாய் என்பதை
உணர்த்து!!

எப்போதும் போல்
அவள்தான் ஜெயிக்கிறாள்
நான் நடித்துக்கொண்டிருக்கிறேன்
தோற்றவன் போல்
எப்போதும்!!

பிள்ளையார் சுழியிட்டு
எதுவுமே எழுதப்படாத
காகிதம் போல்
இருக்கிறது மனது!!


உன்னை எப்போது பிடிக்கிறது
என்று சொல்ல முடியவில்லை
என்னை எப்போதெல்லாம்
பிடிக்கிறதோ
அப்போதெல்லாம் உன்னையும்
பிடிக்கிறது!!

No comments:

Post a Comment