பெருமழை
சிறு தூறலாகும்
தருணம்
நிறைகிறது குளம்
நனைகிறது மனது..
பசித்த வயிற்றுக்கு
மண் வாசனைதான்
எத்தனை இதம்..
மிதமான மழை
விசாலமான முற்றம்
உருண்டு புணர்கையில்
எண்ண முடிகிறது
நீர்த்துளிகளை
உணர்ந்து…
முதல் துளியை
ருசிப்பது போல்
இருந்தது
நா உணர்கிறது
முலைப்பாலின்
அடர்வை…
No comments:
Post a Comment